News

Thursday, 04 August 2022 09:04 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில், போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஆலோசனை

இந்த நிலையில் கனமழை பெய்துவரும் 14 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். அதில், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது. இரவு நேரத்தில் தண்ணீர் அளவை வெளியேற்றத்தை அதிகப்படுத்துவதை தடுக்க வேண்டும்.

மருத்து முகாம்

அனைத்து நிலை அலுவலர்களையும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்திட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும்.

உடனடியாக அவற்றை சேமிப்பு கிடங்குகளில் மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க...

10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை- விபரம் உள்ளே!

3 மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட் எச்சரிக்கை- விபரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)