பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. டிஎன்பிஸ்சி சார்பில் நடத்தப்பட்ட பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் உலவும் போலியான பட்டியலை யாரும் நம்பவேண்டாம் என்று டிஎன்பிஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு (TNPSC Announcement)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 02.07.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் (Fake List) சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தெரியவருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் கேட்டுக்கொள்கிறது. தேர்வாணையத்தின் அனைத்து தேர்வு முடிவுகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புபவர்களின் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, சட்டத்திற்கு புறம்பாக வேலை வாங்கித்தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பத்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.
மேலும் படிக்க
வேலை இல்லாதவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
மீண்டும் வரும் இரண்டு LIC பாலிசிகள்: பொதுமக்களுக்கு குட் நியூஸ்!