News

Tuesday, 22 December 2020 03:59 PM , by: Daisy Rose Mary

Credit : Polimer news

ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வீணாகும் தக்காளிகளை, கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டுப்பொருட்களாக மாற்ற நவீன தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 5000 ஏக்கரில் தக்காளி சாகுபடியாகிறது. இதுமட்டுமின்றி, தக்காளிக்கென சிறப்பாக அய்யலுார், கோபால்பட்டியில் பிரத்யேக சந்தைகளே செயல்படுகின்றன. மாவட்டத்தில் தக்காளி விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தைகளாகவும் இவை இருக்கின்றன. பல்வேறு சத்துக்கள் நிறைந்த தக்காளியின் விலை ஒருபோதும் நிலையாக இருப்பதில்லை. இதுமட்டுமின்றி பூச்சி, நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்படுகிறது. இதையும் தாண்டி சாகுபடி செய்யும் தக்காளியில் 30 சதவீதம் வரை வீணாகிறது. தக்காளியை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது. அதனால் அறுவடை முடிந்த கையோடு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது.

பொங்கல் பரிசு ரூ.2,500/- வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்!!

வீணாகும் தக்காளி

தக்காளி விளைச்சல் அதிகரிக்கும் போது அதன் விலை வெகுவாக குறைந்துவிடுகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் சாலையோரம் தக்காளியை கொட்டி வீணாக்குவது தொடர் கதையாக உள்ளது. மேலும் சிலர், பறிப்பு கூலி, போக்குவரத்துச் செலவு என மேலும் செலவு செய்ய விரும்பாமல் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

ஜாம்-சாஸ் தொழிற்சாலை

நெல், அரிசி, கொப்பரை போன்றவற்றிற்கு உரிய விலை நிர்ணயம் செய்து அரசே நேரடியாக கொள்முதல் செய்கிறது. அதேபோல தக்காளியையும் கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலையின்றி வீணாகும் தக்காளிகளை சேமிக்கவும், விவசாயிகளை பாதுகாக்கவும் திண்டுக்கல்லில் தக்காளியில் 'சாஸ்' அல்லது 'ஜாம்' தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அந்த மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். 

பொங்கலையொட்டி தயார் நிலையில் கரும்புகள்! உரிய விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை!

தொழிற்சாலை அமைக்கும் எண்ணம் இல்லை

இதுகுறித்து திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவிக்கையில், அரசு தரப்பில் தொழிற்சாலை அமைக்கும் எந்த திட்டமும் இல்லை என்றும், மாறாக விவசாயிகளே ஒன்று கூடி மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்த வேண்டும் என்றார். விவசாயிகளின் முயற்சிக்கு அரசு துணை நிற்கும் என்று கூறிய அவர், அதற்கு தேவையான கடனுதவிகளை மானியத்தில் வழங்கப்படும் என்றும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த தோட்டக்கலை உதவி செய்யும் என்றும் கூறினார்.

இயற்கை விவசாயியாக உருவெடுக்கும் எம்.எஸ்.தோனி! - பழ சாகுபடியை தொடங்குகிறார்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)