
இந்தியாவில் முன்னணி வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் டோர் ஸ்டெப் (Door Step) சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவைகளுக்கான கட்டணம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
வங்கி சேவை (Bank Service)
இந்தியாவில் வங்கி சேவைகளை பெறுவது மிகவும் எளிதாகி விட்டது. இன்றைய தொழில்நுட்ப உலகில் நாம் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமே இல்லை. பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் உள்ளிட்ட அனைத்து வங்கி தொடர்பான பணிகளையும் ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம். 24 மணி நேரமும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு வருகிறது. அது மட்டுமல்ல வங்கி சேவைகள் முகவர்கள் வாயிலாக வீடு தேடி வந்தும் வழங்கப்படுகிறது.
தற்போது பொதுத்துறை வங்கிகள் முதல் தனியார் துறை வங்கிகள் வரை டோர் ஸ்டெப் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதன் வாயிலாக வங்கி முகவர் வீட்டிற்கு வந்து கணக்கு தொடங்குதல், பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல் உள்ளிட்ட சேவைகளை செய்கின்றனர். இதில் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
யாருக்கு பொருந்தும்?
ஒரு வாடிக்கையாளர் நாளொன்றுக்கு 20,000 வரை பணம் எடுத்தல் மற்றும் இருப்பு வைத்தல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இச்சேவை 70 மேற்பட்ட மூத்த குடிமகன் அல்லது மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இதனை பெற மேலும் மொபைல் எண்ணை வங்கி கணக்குடன் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் வாடிக்கையாளரின் வீட்டிலிருந்து வங்கி கிளை 5 கி.மீ சுற்றளவில் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க
ATM பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிகள் மாற்றம்: இன்று முதல் அமலுக்கு வருகிறது!
பழைய பென்சன் திட்டம் சாத்தியமே இல்லை: நிதியமைச்சர் எச்சரிக்கை!