வருவாய்த் துறை அமைச்சரை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், 72 மணி நேரத்தில் பயனாளிகளின் வீட்டு வாசலுக்கே, உதவித்தொகைக்கான உத்தரவு கடிதம் கிடைக்கும் வகையில், புதிய திட்டம் கர்நாடகாவில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் வருவாய்த் துறை அமைச்சர் அசோக் இத்திட்டம் பற்றி எடுத்துரைத்தார்.
உதவித்தொகை (Scholarship)
மாநிலத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி உட்பட, மாதாந்திர உதவித்தொகைகள் சரியாக கிடைப்பதில்லை என புகார்கள் வந்துள்ளன. என்னை போனில் தொடர்பு கொண்டால், 72 மணி நேரத்தில் பயனாளிகளின் வீட்டு வாசலுக்கே, உதவித்தொகைக்கான உத்தரவு கடிதம் கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.
மாநிலத்தில் 60 லட்சம் விவசாயிகளுக்கு, ஜாதி, வருவாய், நில ஆவணங்கள் இலவசமாக சமீபத்தில் அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கப்பட்டன. அதுபோல, இத்திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.
மேலும் படிக்க
இல்லம் தேடி வரும் ரேஷன்: பஞ்சாப் முதல்வரின் அதிரடி திட்டம்!
தமிழகத்திற்கு தேசிய நீர் விருது: நீர் மேலாண்மையில் மூன்றாவது இடம்!