உடுமலை பகுதிகளில், ட்ரோன் வழியாக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை பகுதிகளில், தென்னை, வாழை, மக்காச்சோளம், நெல், காய்கறி பயிர்கள் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணிக்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், இதற்கான செலவினம் அதிகரித்துள்ளது.
மருந்து தெளிப்பு (Spraying Pesticides)
தென்னையை தாக்கும், மாவுப்பூச்சி, குரும்பை உதிர்தல், செந்தேன் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மருந்து அடிக்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில், தற்போது உடுமலை பகுதிகளில், நவீன முறையில், பயிர்களுக்கு ட்ரோன் வழியாக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: தற்போது ஸ்பிரேயர் வழியாக மருந்து அடிக்க, ஆட்கள் தேவை அதிகரித்துள்ளது. உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன், பல மணி நேரம் அடிக்க வேண்டியுள்ளது. 11.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட, ட்ரோன் வழியாக, மருந்து தெளித்தால், நேரமும், செலவும் மிச்சமாகிறது.
ஏக்கருக்கு, 800 ரூபாய் முதல், தென்னைக்கு, 2 ஆயிரம் செலவாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவு பயிர்களுக்கு, அரை மணி நேரத்தில் மருந்து அடிக்க முடிகிறது.
மேலும் படிக்க