நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 April, 2023 12:13 PM IST
drones to keep an eye on dumpyards in Kerala with help of world bank

பிரம்மபுரம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் பொதுமக்கள் அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில் கேரளா முழுவதும் குப்பை கிடங்குகள் ஆய்வு செய்ய ட்ரோன்களை பயன்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

குவிந்துள்ள குப்பைகளின் அளவு மற்றும் குணாதிசயங்களை அளவிடுவதே நோக்கமாக கொண்டுள்ளது இந்த ட்ரோன் திட்டம். உலக வங்கியின் நிதியுதவியுடன், கேரள மாநில திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் உள்ளூர் சுய-அரசு துறை (LSGD) இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுப்பு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் ஆய்வுகளை தொடங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக வங்கியின் வல்லுநர்கள் ஆய்வுகளுக்கான விதிமுறைகள் மற்றும் குறிப்புகளை இறுதி செய்துள்ளனர். இப்போது அவற்றைச் செயல்படுத்த ஒரு நிறுவனத்தை அடையாளம் காண வேண்டும்," என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் "மே மாதத்தில் ஆய்வுகளை தொடங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்." என தெரிவித்துள்ளார்.

ட்ரோன் ஆய்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அறிந்த அதிகாரிகள் தெரிவிக்கையில், "ட்ரோன் மனித தலையீடு தேவையில்லாத ஒரு மேம்பட்ட முறையாகும். கணக்கெடுப்பு மூலம், குப்பை கிடங்குகளின் பண்புகள், அவற்றின் அடர்த்தி மற்றும் எந்த வகையான கழிவுகள் அங்கு குவிந்துள்ளது என்பதை கண்டறிய முடியும்,'' என்றார். LSGD கணக்கெடுப்புக்காக சுமார் 44 குப்பை கிடங்குகளை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில், 40 நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் கீழும், நான்கு ஊராட்சிகளின் கீழ் வருகின்றன.

ஆய்வுகளின் தரவுகள் பயோமைனிங் முயற்சிகளுக்கு துணைபுரியும் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில், பல்வேறு குப்பைக் கிடங்குகளில் குவிந்துள்ள பெரும் பாரம்பரிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், பணவசதி இல்லாத உள்ளாட்சி அமைப்புகள்- பணிகளுக்கு நிதி வழங்க முடியாமல் திணறி வருகின்றன. 44 குப்பைத் தொட்டிகளில் 18 அகற்றப்பட்டு, சுமார் 1.59 லட்சம் டன் மரபுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் 1 டன் மரபுக் கழிவுகளை பயோமைனிங் செய்ய ரூ.550 நிர்ணயித்துள்ளது மையம். 1 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகளுக்கு, ஒன்றிய அரசு 50% செலவையும், மாநில அரசும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பும் முறையே 33% மற்றும் 17% செலவை ஏற்கும். இதுவே 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்புகளில், பயோமைனிங் செலவில் முறையே 33% மற்றும் 22% முறையே ஒன்றிய மற்றும் மாநில அரசு ஏற்கும். மீதமுள்ள 45% செலவினத்தை உள்ளாட்சி அமைப்பு ஏற்கும்.

டன் ஒன்றுக்கு 550 ரூபாய் போதாது,  கேரளாவில் டன் ஒன்றுக்கு 1,000 முதல் 1,200 வரை செலவாகும். "உள்ளாட்சி அமைப்புகள் பணிக்காக பெரும் தொகையை திரட்ட முடியாது. இப்போது, உலக வங்கி நிதியின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்,” என்று அந்த அதிகாரி கூறினார். 160 ஏக்கர் நிலத்தை தூய்மைப்படுத்துவதுடன் 10.5 லட்சம் டன் மரபுவழி கழிவுகளை அகற்றுவது இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

பயிர்க்கடன் வழங்குவதில் சாதனை- சேலம் மாவட்ட ஆட்சியர் பெருமிதம்

English Summary: drones to keep an eye on dumpyards in Kerala with help of world bank
Published on: 16 April 2023, 12:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now