நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 September, 2023 3:17 PM IST
Drought relief fund in the bank account of 6 district farmers

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் புதிய வேளாண் கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்து, பருவமழையின்மையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிதமான வேளாண் வறட்சி நிவாரண நிதியினை வழங்குதலையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைவாக மழை பெய்த காரணத்தினால் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக 3 இலட்சத்து 52 ஆயிரத்து 797 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்கள் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து 33% மற்றும் அதற்குமேல் பாதிக்கப்பட்ட பரப்பினை உறுதி செய்தனர், அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துரையை பரிசீலித்து பாதிக்கப்பட்ட 1,87,275 விவசாயிகளுக்கு ரூ.18,140 கோடி நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,34,305 விவசாயிகளுக்கு ரூ.13,271 கோடியும், சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 25,847 விவசாயிகளுக்கு ரூ.25.77 கோடியும், தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 17,096 விவசாயிகளுக்கு ரூ.13.85 கோடியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,746 விவசாயிகளுக்கு ரூ.6.63 கோடியும், விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 3,220 விவசாயிகளுக்கு ரூ.240 கோடியும், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 61 விவசாயிகளுக்கு ரூ.4.43 இலட்சமும் என மொத்தம் ரூ.18,140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைத்திட புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிதமான வேளாண் வறட்சி நிவாரணம் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று 3 விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார்.

இதே நிகழ்வில் மொத்தம் 62 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண்- உழவர் நலத்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் காண்க:

ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர்- திட்டம் தொடக்கம்

தமிழகத்தை விடாத கனமழை- இன்று 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

English Summary: Drought relief fund in the bank account of 6 district farmers
Published on: 04 September 2023, 03:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now