தமிழகத்தில் பருவமழையால் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முருங்கை (Drumstick) கிலோ ரூ.300ஐ தாண்டியும், கத்தரி, தக்காளி விலை ரூ.100ஐ தாண்டியும் விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
காய்கறிகள் விலை உயர்வு (Vegetables Price Raised)
தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால், காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
ஒரு சென்னையில் கிலோ தக்காளி மீண்டும் ரூ.110ஐ தொட்டது. அதேபோல், கத்தரிக்காய் விலையும் ரூ.100 முதல் ரூ.110க்கு விற்பனையாகிறது. மழையால் முருங்கைக்காயின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.330 என்ற அளவில் விற்கப்படுகிறது.
இல்லத்தரசியின் யோசனை
பல ஹோட்டல்களில் தக்காளி சாதத்தை நிறுத்திவிட்டு லெமன் சாதத்திற்கு மாறிவிட்டனர். கத்தரிக்காய் கூட்டு வைப்பதையும் 'கத்தரித்து' விட்டனர்.
‛‛விலை உயர்ந்த கத்தரி, தக்காளி, முருங்கை விலையில் இருந்து தப்பிக்க விலை குறைந்த கீரை வகைகள், சுரைக்காய், புடலங்காய், நூக்கல், பீர்கங்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை வாங்கி சமைக்கலாம்'' என ஒரு இல்லத்தரசி யோசனை கூறினார்.
மேலும் படிக்க