தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் ஓரிரு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காற்று வீசும் திசை மாறியுள்ள காரணத்தால் கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறைந்துள்ளது. மேலும் இன்னும் ஓரிரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 5:30 மணி வரை எடுக்கப்பட்ட வெப்பநிலை ஆய்வில் திருச்சி, தெற்கு மதுரை, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி, காரைக்கால், கரூர் பரமத்தி, நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய 7 இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
நேற்றைய நிலவரம்படி ஒரு இடங்களில் கூட குறிப்பிடும் படியான மழை பதிவாகவில்லை, மற்றும் அடுத்த ஓரிரு தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran