குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடரும் கன மழை - Heavy Rain In Tamil Nadu
வடகிழக்கு பருவமழை தொடங்கியது தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதிலும் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் எரிகள் மற்றும் அணைகள் நிறம்பி வருகின்றன.
நேற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இன்றும் சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோல், மதுரை, திருநெல்வேலி, குமரி , விருதுநகர், ராமநாதபுரம் , தஞ்சை சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மிக கன மழை எச்சரிக்கை - TN expects heavy Rainfall
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், கடலூர் மற்றும் நீலகிரி, தேனி , மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் , அடுத்த 72 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரவித்துள்ளது.
மழை பொழிவு - Rainfall
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி 12 செ.மீ, கிண்ணக்கொரை, கெட்டி தலா 10 செ.மீ , சாம்ராஜ் எஸ்டேட் 9 செ.மீ, குந்தா பாலம், குன்னூர் , பர்லியார் மற்றும், திருச்சுழி (விருதுநகர் ), பரமக்குடி (ராமநாதபுரம் ) தலா 7 செ.மீ, சுராலகோடு (கன்னியாகுமாரி ), தூத்துக்குடி, ராசிபுரம் ( நாமக்கல் ) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க..
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை - முதல்வர் அதிரடி!!
நீங்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சியா? கிராம உதவியாளராகலாம் உங்களுக்கான வாய்ப்பு!!