நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சுமார் 9,468 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வேளாண் துறையினர் நடத்திய முதற்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த வியாழக்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. மேலும் புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட சூறைகாற்றால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நெற் பயிர்கள், கரும்பு, வாழை, எண்ணை வித்து பயிர்கள் உள்ளிட்டவை நீரில் மூழ்கி சேதமாகின.
9,468 ஹெக்டேர் சேதம் - 9,400 hectares Damaged
வேளாண் துறையினரின் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 9,468 ஹெக்டேரில் நெல் மற்றும் ஒரு சில பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வயல்வெளிகளில் இருந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் வேளாண்துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவிக்கும் வேளாண்துறையினர், கடந்த 2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயல் தாக்குதலை காட்டிலும் நிவர் புயல் டெல்டா மாவட்டங்களில் குறைவான பாதிப்பையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர். கஜா புயல் காரணமாக லட்சக்கணக்கான தென்னை மரங்களை வேரோடு சாய்தன இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
பயிர் சேதம் விவரம் - Crop Damaged Detail
8,470 ஹெக்டேர் நெல் பயிர்கள், 428 ஹெக்டேர் பருப்பு வகைகள், 570 ஹெக்டேர் எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் 998 ஹெக்டேர் பிற பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. வேளாண்துறையின் தீவிர நடவடிக்கைகளால் இன்னும் இரண்டு நாட்களில் 60 சதவீத பயிர்கள் காப்பாற்றப்படும் என்று வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பயிர் சேத விவரம் - District wise Report
பாதிக்கப்பட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் - 750 ஹெக்டேர், திருவள்ளூர் - 2,225 ஹெக்டேர், கடலூர் மாவட்டத்தில் 1,335 ஹெக்டேர், விழுப்புரத்தில் -1,205 ஹெக்டேர், திருவண்ணாமலை 958 ஹெக்டேர், செங்கல்பட்டு - 2,760 ஹெக்டேர் , ராணிப்பேட்டை 235 ஹெக்டேர் பகுதிகள் அடங்கும்.
பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தல்
இந்நிலையில் விவசாயிகள் தங்களின் பயிர்களை காப்பீடு செய்வதன் (crop insurance) மூலம் பயிர் இழப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள வேளாண்துறையினர் விவசாயிகள் தங்களின் பயிர்களை உடனே காப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் கடந்த வியாழக்கிழமை வரை 16,39,065 விவசாயிகளிடம் இருந்து 16,69,034 ஏக்கர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
நாளை வங்கக்கடலில் உருவாகிறது புயல் - தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!
”தமிழக மீன்’’ அங்கீகாரம் பெறும் "அயிரை மீன்” !!