வருங்காலம் முழுவதுமாக e-சேவையை நம்பியுள்ளது. உலகத்தின் வேகத்திற்கு ஏற்ப நாம் ஈடு கொடுத்து ஒட வேண்டியுள்ளது. அந்த வகையில் GST மற்றும் E-way Billing Advance என பல தகவல்கள் புதிதாக நம்மிடையில் புழக்கத்தில் உள்ளது. இதற்கான சரியான பயிற்சி தேவை, எனவே அரசின், இந்த உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவரம் கீழே,
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, பொருட்கள் சேவை, வரி மற்றும் மின் வழிச் சீட்டு "குறித்த இணையவழி பயிற்சி (3 நாட்கள்) பயிற்சினை வரும் 22.11.2022 தேதி முதல் 24.11.2022-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை) வழங்க உள்ளது.
இப்பயிற்சியில் பொருட்கள் சேவை, வரி மற்றும் மின் வழிச் சீட்டு" மற்றும் அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகிவையும் விவாதிக்கப்படும்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி/கைபேசி எண்கள்.
முன்பதிவு அவசியம்:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032, 9444556099, 9677152265, 044-22252081/22252082.
மேலும் படிக்க:
ATMல் கிழிந்த நோட்டு வந்தால் என்ன செய்வது?
இனி அனைவருக்கும் ரேஷன் கிடைக்காது- விதிகளில் அதிரடி மாற்றம்!