வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் உட்பட 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
19.04.21
-
வெப்பச்சலனம் காரணமாக, , நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
-
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
20.04.21
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
21.04.21 முதல் 23.04.21 வரை
-
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
-
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு (Temperature forecast)
20.04.21 முதல் 21.04.21 வரை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
அதிகமாக வியர்க்கும் (Excessive sweating)
-
தமிழகம், புதுவையில் காற்றின் ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்பதால், பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்.
-
தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.
ஆடைகள்
வெள்ளை மற்றும் வெளிறிய வண்ணம் கொண்ட (Light colour)கதர் அடைகளை அணிவது சிறந்தது.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 3 சென்டி மீட்டரும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி மா
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரூ.2 கோடி வெல்ல அருமையான வாய்ப்பு- Don`t miss it!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!