இன்று கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை (13.01.2022) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுகிறது குறிப்பிடதக்கது. வடகிழக்கு பகுதியில் இருந்து குளிர்ந்த காற்று வீசுவதால் தமிழகம், ஆந்திராவில் தற்போது பனிப் பொழிவுடன் கூடிய குளிர் நிலவுகிறது. இதனால் மழை பெய்வது குறைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. பகலில் வெயில் கொளுத்துவதும், இரவில் குளிர்வதுமாக சூழ்நிலை நிலவுகிறது.
இதைத் தொடர்ந்து, 14ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவுறுத்தப்படுகிறது.
மீனவர்களின் கவனத்திற்கு: மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
கவனம்! RD கணக்கு மூலம் பணத்தை சேமிப்பவர்கள்! கவனம்
பருப்பு பயிரிடும் விவசாயிகள் தொடங்கி ஏனைய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்