கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட கலெக்டர் ஜி. எஸ் சமீரன் தெரிவித்துள்ளார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்க்கவும், மேம்படுத்தவும், நெசவாளா்கள் நேரடியாக தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில், மானியங்களும் வழங்கப்படுகிறது. மேலும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், இலவச மின்சாரம், குழந்தைகளுக்கு கல்வி, ஈமசடங்குகளுக்கு நிதி உதவி, வீடு கட்ட நிதி உதவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நெசவாளர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு வகையில் உதவிகளும் வழங்கப்படுகிறது. அண்மையில் தமிழகத்தில் குறைகளை போக்கும் வகையில் தொலைபேசி சேவை மைய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசின் தேசிய கைத்தறி வளா்ச்சித்திட்ட வழிகாட்டுதல்படி கைத்தறி நெசவாளா், கைத்தறி நெசவு சாா்ந்த உபதொழில்களில் ஈடுபடும் நெசவாளா்களின் குழந்தைகளுக்கு (இரண்டு குழந்தைகள் வரை) மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது உதவித் தொகை பெறும் துணிநூல் கல்வி நிறுவனங்களில் டெக்ஸ்டைல்ஸ் தொடா்பான பட்டய படிப்புகள், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க:
அறுவடைக்கு துளசி தயார், நல்ல விலைக்காக காத்திருக்கும் விவசாயிகள்