சாமானியர்களின் சிரமங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முதலில் பருப்பு பின்னர் காய்கறிகள், தற்போது முட்டை மற்றும் கோழிக்கறி விலை உயர்ந்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் முட்டையின் தேவை வேகமாக அதிகரித்துள்ளதாக முட்டை விறபனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக இருந்து வந்தநிலையில் சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக தற்போது அதிகரித்து உள்ளது பொதுமக்களிடையே கடும் வேதனையை உண்டாகியுள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். இதன்காரணமாக கறிக்கோழி விலை கிலோ ரூ.95 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல் முட்டைக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர்.
தற்போது முட்டைக்கோழி விலை கிலோ ரூ.83 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் கடந்த 5 நாட்களில் 25 காசுகள் உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாமானியர்களின் சிரமங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முதலில் பருப்பு பின்னர் காய்கறிகள், தற்போது முட்டை மற்றும் கோழிக்கறி விலை உயர்ந்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் முட்டையின் தேவை வேகமாக அதிகரித்துள்ளதாக முட்டை விறபனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதங்களில் தக்காளி விலை உயர்விலுருந்து பொதுமக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது முட்டை மற்றும் கறிக்கோழி விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளையும் சாமானியர்களையும் கடும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
508 ரெயில் நிலையங்கள் சீரமைப்பு! தமிழகத்தில் மற்றும் 18! எந்தெந்த ரயில் நிலையங்கள் தெரியுமா??
இறுதி அஸ்திரமும் போச்சு- அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு