News

Saturday, 13 August 2022 01:28 PM , by: R. Balakrishnan

Egg price raised

நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை. ஒரே நாளில் 10 காசுகளும், 2 நாட்களில் 30 காசுகளும் விலை உயர்ந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 20 காசுகளில் இருந்து ஒரே நாளில் 10 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை உயர்வு (Egg Price Raised)

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 11ஆம் தேதி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தி 4 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் பண்ணை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப் பட்டு 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை உயர்வு குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும்போது தமிழகத்தில் ஆடி மாதம் முடிவடையும் நிலையில் விற்பனை சற்று அதிகரித்து வருவதாகவும், அதேபோல தமிழகம், கேரளாவில் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இவ்விலை மேலும் உயரவே வாய்ப்புகள் உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் 45 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 5 ரூபாய் வரை இருக்கிறது.

மேலும் படிக்க

வாழை இலையில் வருமானம்: விவசாயிகளுக்கு நல்வாய்ப்பு!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி: இன்று குறைதீர்ப்பு முகாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)