நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முட்டைக்கான பண்ணையின் கொள்முதல் விலையை 5 ரூபாய் 20 காசுகளில் இருந்து இன்று ஒரே நாளில் 15 காசுகள் உயர்த்தி 5 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது விலை 5 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 22ஆம் தேதி 10 காசுகள் என உயர்த்தப்பட்டது. அன்று முதல் முட்டை விலை ரூ.5.20 ஆக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்பொழுது முட்டையின் விலை ரூ.5.50 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: SBI, HDFC, ICICI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: அது என்ன?
இந்த விலை ஏற்றமானது இதுவரை கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத உச்சபட்ச விலை என்று பேசப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.5.25 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் புதிய ஒரு உச்சத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை உயர்வு குறித்துப் பண்ணையாளர்கள் கூறுகையில் ”தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோடைக்கால துவக்கத்திலேயே அதிகளவு வெப்பத்தினால் வயதான கோழிகள் இறந்துவிடும் என்பதால் அவை அனைத்தையும் பண்ணையாளர்கள் அப்போதே விற்பனை செய்துவிட்டனர். அதோடு, பண்ணைகளில் புதிதாக கோழிகளை விடாமல் இருந்து வந்துள்ளனர்.
மேலும் படிக்க: TNAU: Masters, PhD படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்
இதன் விளைவாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தியானது கணிசமாக குறைந்தது. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்திற்கு தினசரி நாமக்கல் மண்டலத்தில் இருந்து சராசரியாக 40 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே, விற்பனைக்கு முட்டைகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.
மேலும் படிக்க
ஆடு வளர்ப்பின் முதல் கட்டத்தில், நீங்கள் செய்யும் பொதுவான தவறுகள்