பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இ.ஐ.எல். (EIL) பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு தரப்பட்டுள்ளது.
இந்நிறுவனமானது கடந்த அரை நூற்றாண்டாக பல்வேறு பொறியியல் துறைகளில் திட்டங்களை அறிமுக படுத்தி அவற்றை செயல்படுத்தியுள்ளது. அணுசக்தி, சூரிய சக்தி, நீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய வளர்ந்துவரும் துறைகளில் பல உலக நாடுகளில் தடம் பதித்து வருகிறது.
இந்திய பொறியியல் நிறுவனத்தில் மொததம் 96 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30/04/2019
வயது வரம்பு : 48 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: 15 முதல் 20 ஆண்டுகள்
காலிப் பணியிடங்கள் : 96
துறைவாரியான காலியிடங்கள்
சிவில் - 13
மெக்கானிக் - 31
எலக்ட்ரிக்கல் - 17
வெல்டர் - 14
இன்ஸ்ருமென்டேஷன் - 14
கிடங்கு - 04
பாதுகாப்பு - 3
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு பெரும்பாலும் டெல்லியில் நடத்தப்படும்.
பணியிடம்: டெல்லி/ குருகாவூன்
மேலும் விவரங்களுக்கு www.engineersindia.com என்ற மின்னஞ்சலை அணுகலாம்.