தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி முதில் டிஜிட்டல் முறையில் வாக்காளா் அட்டையை (Digital voter ID) பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சட்டம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்..
இது தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியிருப்பதாகவது, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அட்டையை செல்லிடப்பேசி மற்றும் கணினிகளில் திங்கள்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிடிஎஃப் - PDF கோப்பாக இருக்கும் இதில் திருத்தங்களைச் செய்ய முடியாது. ஆனால், பிரதி எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
காலதாமதத்தை தவிர்க்கும் நடவடிக்கை
புதிய வாக்காளா்களுக்கு அட்டை தாயாரித்து அவா்களிடம் கொண்டு சோ்ப்பதற்கு காலதாமதம் ஆகிறது. ஆனால், இந்த முறையில் வாக்காளா் அட்டை தயாரானவுடன் அதனை வாக்காளா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இக்கால இளைய தலைமுறை வாக்காளா்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறியவா்களாக இருக்கிறாா்கள். அவா்கள் இதனை எளிதில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய இணையதளத்தில் கிடைக்கும்
புதிதாக பதிவு செய்த வாக்காளா்கள் திங்கள்கிழமை முதலும், மற்ற வாக்காளா்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதலும் இந்த மின்னணு வாக்காளா் அட்டை பெற முடியும். வோட்டா் ஹெல்ப்லைன் எனப்படும் செல்லிடப்பேசி செயலி, தோ்தல் ஆணையத்தின் வோட்டா் போா்ட்டல் இணையதளத்திலும் இந்த டிஜிட்டல் வாக்காளா் அட்டை கிடைக்கும்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்த மின்னணு அட்டையை நீங்கள் https://voterportal.eci.gov.in/ என்ற தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த இணையத்தில் லாகின் செய்த பின்பு, E- EPIC என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இந்த பதிவிறக்கம் காலை 11.14 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையம் நிறுவப்பட்டது. அன்றைய தினமே தேசிய வாக்காளா் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
காரீப் பருவ உணவு தானிய கொள்முதல் பணிகள் மும்முரம் - மத்திய அரசு தகவல்!!
100% மானியத்தில் சொட்டுநீா் பாசனம்!! - விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!