திரிபுராவில் உள்ள மலை கிராமங்களில், 80 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி கிடைத்துள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இங்குள்ள பல மலை கிராமங்கள் மின்சார வசதியில்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், மின்சார வசதி கிடைத்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.
மின்சார வசதி (Electricity Facility)
பல ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத நிலையில், இந்த கிராமங்களுக்கு 'சோலார்' எனப்படும் சூரியமின்சக்தி வாயிலாக மின்சார வசதி செய்வதற்கான திட்டம், கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கியது. இதை பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 30 இல் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
இதன்படி, கோவாய் மாவட்டத்தில் உள்ள சர்க்கிபரா உட்பட, 12 கிராமங்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. இதனால், இந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை மண்ணெண்ணெய் விளக்கு அல்லது 'பேட்டரி' வாயிலாக இயங்கும் விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். வீடுகளுக்கு மட்டுமல்லாமல், கிராம சந்தை, தெருவிளக்கு போன்றவற்றுக்கும் மின்சார வசதி கிடைத்துள்ளது.
இதனால், இந்த கிராம மக்கள் அதிக நேரம் உழைப்பதுடன், அதிக வருவாயை ஈட்டி வருகின்றனர். மாணவர்களும் இரவில் படிக்க முடிகிறது.இதுவரை, 12 வட்டாரங்களில், 2,930 தெரு விளக்குகள், 239 கிராம சந்தைகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
புகார் கேட்க சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கியது மின் வாரியம்!
தமிழ்நாட்டிற்கு 4758.78 கோடி ரூபாய் நிதி விடுவிப்பு: மத்திய அரசு!