News

Tuesday, 20 July 2021 04:51 PM , by: Aruljothe Alagar

TNEB

ஊரங்கு நேரத்தில் பல தளர்வுகள் அளிப்பட்டுள்ளது. மின் பகிர்மான வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு இது குறித்து ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள மின்வாரிய அறிவிப்பில் ஜூலை மாத மின் கட்டணத்துடன் கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்க கூடாது எனவும், முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த வசூலிக்கலாம் என்ற உத்தரவும் திரும்ப பெறப்படும் எனவும் மின்வாரியத் துறை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து புதிய மின் இணைப்பு வழங்கும் நேரத்தில் காப்பு வைப்பு தொகை என்று குறிப்பிட்ட தொகையை மின்வாரியம் வசூலித்து வருகிறது. பிறகு பயன்பாட்டை பொறுத்து இந்த தொகை மாற்றியமைக்கப்படுகிறது. அதாவது மின் இணைப்பு பெறும் பொழுது தெரிவிக்கப்பட்டிருந்த அளவை விட அதிகமாக மின்சாரம் பயன்படுத்தி இருந்தால் கூடுதலாக காப்பு வைப்பு தொகை வசூலிக்கப்பட்டது.

மின்சாரப் பயன்பாடு குறைந்திருந்தால் இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இதற்காக மின் ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயித்துள்ள வட்டி வழங்குகிறது. 2020-21ம் நிதியாண்டிற்கான காப்பு தொகை வசூலிப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கு என்று காரணம் கூறப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊரடங்கில் தளா்வுகள் அறிவித்துள்ள நிலையில், கூடுதல் காப்பு வைப்புத் தொகை குறித்து ஆய்வு நடத்த அனைத்து மின் பகிர்மான வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளா்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி மின் நுகர்வோரின் காப்பு வைப்புத் தொகை கணக்கைவிட குறைவாக இருப்பின் மீதமுள்ள தொகையை வசூல் செய்யவும் அதிமாக கணக்கிடப் பட்டிருந்தால் அதை சரி செய்யவும் மின் வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது  உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக மின்வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அறிவிப்பு விடுத்துள்ளார்.  இந்த ஜூலை மாத மின் கட்டணத்துடன் கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாகவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

மின் கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)