தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு 2026-27 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின் கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மின்சார வாரியத்துக்கு எழுதிக் கொடுக்கலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனிட் வாரியாக வசூலிக்கப்படும் கட்டணம்:
- 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 ரூபாய் என இரண்டு மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும்.
- 300 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 145 ரூபாயும், 400 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 295 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
- 500 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 595 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
- 600 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 310 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
- 700 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 550 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
- 800 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 790 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
- 900 யூனிட் வரை பயன்படுத்தினால் இரு மாதங்களுக்கு கூடுதலாக 1130 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் படிக்க:
அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கும் ரியல்மி GT நியோ 3T: முக்கிய அம்சங்கள்
தங்கு தடையின்றி ஆவின் பால் விநியோகம்: 24 மணி நேரமும் தகவல் ஏற்கப்படும்