மாவட்டம் தோறும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கான தகுதிகள், சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை சனிக்கிழமை (15ம் தேதி) நடக்கிறது.
ஓசூர் தனியார் நிறுவனத்தால் நடந்தப்பட உள்ள முகாம் காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. முகாமில், 2020-21 மற்றும் 2022ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 20க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக 16,557 ரூபாய் மற்றும் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளுடன் கூடிய நிரந்தர பணி நியமனம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
5 ரூபாய்க்கு ஒரு தோசை, 20 ரூபாயில் பசியாற்றும் சாயல்குடி அம்மாச்சி
விவசாயிகளுக்கு நற்செய்தி: 700 முதல் 1200 லிட்டர் பால் தரும் எருமை இனம்