உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிமன்ற உதவியாளர் (Junior Court Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள 210 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு (Job Offer)
உதவியாளர் பணிக்கு ரூ.35,400 ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு குறைந்தபட்ச கணிணி அறிவு இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, கணினி அறிவுத் தேர்வு, ஆங்கில தட்டச்சு வேக சோதனை மற்றும் நேர்காணல் ஆகிய 4 கட்டங்களுக்கு பின்னரே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/ExamSys22/Registration/Instruction.aspx என்ற லிங்கில் சென்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் உங்களது சமீபத்திய புகைப்படம், கையெழுத்து மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
உச்சநீதிமன்றத்தின் உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு தகவல்களை https://main.sci.gov.in/pdf/recruitment/17062022_130355.pdf என்ற இந்த லிங்கில் சென்று அறிந்து கொள்ளலாம். வரும் ஜூலை 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து வசதி: பெங்களூருவில் அறிமுகம்!
மீன்பிடி மானியம் இரத்து: எதிர்ப்பு தெரிவித்த இந்திய மீனவர்கள்!