இன்று சென்னை கிண்டியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், துறையின் செயலர், இயக்குனர் முன்னிலையில் நடைபெற்றது.
விவசாயிகளின் விலை பொருட்களுக்கு தகுந்த விலை கிடைப்பதை உறுதி செய்ய அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள், E-NAM போன்ற தளங்கள் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் இத்துறை அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு முன்னர் அக்டோபர் 12, 2022 அன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையில் ஒன்றிய அரசு நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறையின் செயலர், சிறப்புச் செயலர், இயக்குனர்கள், தலைமை பொறியாளர் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
விவசாய பெருமக்களுக்கான அரசு திட்டங்கள் அதில் ஏற்பட்ட பயன்கள்- ஒர் பார்வை (Benefits of Government Schemes to Farmers - An Overview)
பிரதமர் கிசான் யோஜனா மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்கள், நமது நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகிறது.
விவசாயிகள் வலுப்பெறும் போது நாடு தானாகவே முன்னேறும். வேளாண் துறையுடன், புதிய இந்தியா வளமானதாக இருக்கும். பிரதமர் கிசான் சம்மன் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பல்வேறு திட்டங்கள் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகிறது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா மற்றும் பிற திட்டங்கள் மூலம், இந்தியாவில் உள்ள சுமார் 11.3 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1.82 லட்சம் கோடி நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொற்றுநோய் காலத்தில் ரூ.1,30 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது மற்றும் தொற்றுநோய்களின் போது, 1,30 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, இது சிறு விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும், விவசாய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்காக 11,632 திட்டங்களுக்கு ரூ.8,585 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கது.
அனைத்து ஏபிஎம்சி மண்டிகளும் (சந்தைகள்) டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளன, அதில் 1.73 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் மற்றும் eNAM இல் ரூ 1.87 லட்சம் கோடி வணிகம் நடந்துள்ளது.
நேஷனல் அக்ரிகல்ச்சர் மார்க்கெட் (eNAM) என்பது ஒரு இந்திய மின்னணு வர்த்தக இணையதளமாகும், இது விவசாயப் பொருட்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்குவதற்கு, தற்போதுள்ள APMC மண்டிகளை இணைக்கிறது.
மேலும் படிக்க:
திண்டுக்கல்: அஸ்வகந்தா சாகுபடியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகம்: 5ம் வகுப்பு கல்வி போதும், கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!