2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் சேர்க்கை தொடங்க உள்ளது. அதற்கான விண்ணப்பத்தை மே 2 ஆம் முதல் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர் கல்வி துறை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தை மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
2018 - 2019 ஆண்டு முதல் கலந்தாய்வு என்பது இணையதளம் மூலம் நடை பெற்றது. நடப்பாண்டிலும் இம்முறை பின்பற்ற உள்ளதால் ஜூன் முதல் வாரத்திலிருந்து RANDOM NUMBER வழங்கப்பட்டு பின்பு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கும். ஜூன் மாத இறுதியிலிருந்து பிற்படுத்த பட்டோர், பின்தங்கிய பிரிவு,மாற்று திறனாளி மற்றும் விளையாட்டு துறை போன்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இதனை தொடர்ந்து ஜூலை முதல் வாரத்திலிருந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.
பொறியியல் தகுதி மதிப்பெண்ணில் மாற்றும்
அகில இந்தியா தொழில்நுட்ப கல்வியின் அறிவுறுத்தலின் படி இம்முறை தமிழக அரசு தகுதி மதிப்பெண்ணில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி பழங்குடியின மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண் 35 -ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதே போன்று மற்ற பிரிவு மாணவர்களின் தகுதி மதிப்பெண்ணில் மற்றம் கொண்டு வர பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் 50 -ல் இருந்து 45 ஆகவும், B.C, M.B.C, முஸ்லீம் ஆகிய பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் 45-ல் இருந்து 40 ஆகவும் குறைத்துள்ளது.