1,செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு வழங்கிய ஆட்சியர்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பாக செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி நேற்று பொதுமக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் ஆட்சியர் வழங்கினார்.
2,சிகரத்தை தோட்ட தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக தங்கத்தின் விலை கண்ணாமூச்சு காட்டி வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3,தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு அறுவடை இயந்திரம் போதுமானதாக இல்லை எனவும், அதற்கேற்ப உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4,உருளை விளைச்சலை அதிகரிக்க Lay’s கையிலெடுக்கும் புதிய முயற்சி !
பெப்சிகோ (PepsiCo) இந்தியா, அதன் பிராண்டான "லே'ஸ்" (Lay's ) மூலம், விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஒரு பயிர் மற்றும் ப்ளாட்-லெவல் முன்கணிப்பு நுண்ணறிவு மாதிரியை அறிவித்துள்ளது. இது பயனர்களுக்கு ஏற்ற மொபைல் பயன்பாடுகளில் (app) செயல்பாட்டு டேஷ்போர்டுகள் மூலம் உருளைக்கிழங்கு விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு உதவுகிறது.
பயிர் நுண்ணறிவு மாதிரியானது, முன்னணி உலகளாவிய வேளாண் தொழில்நுட்ப நிறுவனமான க்ரோபின் (Cropin) உடன் இணைந்து தொடங்கப்பட்டது. இது பெப்சிகோவின் இந்தியாவிற்கான 'துல்லிய வேளாண்மை' மாதிரியின் ஒரு பகுதியாகும். இத்திட்டமானது குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பண்ணைகளில் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது என பெப்சிகோ தெரிவித்துள்ளது.
5, AGRI STACK GRAINS வலைதளத்தில் விவசாயிகளின் பதிவேற்றம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் AGRI STACK GRAINS வலைதளத்தில் விவசாயிகளின் நில விவரம் பதிவேற்றம் செய்யும் பணியில் அதிக அளவிலான விவசாயிகளின் விவரத்தை பதிவேற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலரை பாராட்டி நேற்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்வின் போது நாகப்பட்டினம் சார் ஆட்சியர் உடனிருந்தார்.
6.நாட்டில் 651 அத்தியாவசிய மருந்துகளின் விலை 7 சதவீதம் வரை சரிவு...
மருந்துகள் மீதான உச்சவரம்பு விலையை மத்திய அரசு நிர்ணயித்ததன் எதிரொலியாக விலை குறைந்ததாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தகவல்.
7,சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 318-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க
ஏறத்தாழ 9 கோடி புத்தகம் கொண்ட இலவச ஆன்லைன் புத்தக களஞ்சியம்!
எல்லாம் சரியா நடக்குதா.. களத்தில் இறங்கி மெட்ரோ பணிகளை பார்வையிட்ட தலைமைச் செயலாளர்