News

Tuesday, 06 July 2021 08:06 PM , by: R. Balakrishnan

Credit : Vivasayam

மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் (Loan) பெற வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தொழில்முனைவோர்களை (Enterprenuer) ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

யாரெல்லாம் பயன் பெறலாம்?

மீனவர்கள், மீன் வளர்ப்போர் சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள், மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இணையத்தில் விண்ணப்பிக்க

இத்திட்டத்தின் கீழ் பொதுபிரிவினருக்கு 25 சதவீதம், மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1 கோடியே 25 லட்சம்) மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1 கோடியே 50 லட்சம்) வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க

சுயவேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்: ஸ்டாலின் அறிவுறுத்தல்!

மின் விபத்துக்களை தடுக்கும் உயிர் காக்கும் சாதனத்தை வீடுகளில் பொருத்த உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)