பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 25 February, 2022 2:26 PM IST
EPFO Good News: because of this new feature, members will be happy

இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய நற்செய்தி வெளியாகியுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO துறை தன் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதனால் உறுப்பினர்களுக்கு பெரிய நிவராணம் பெறுவார்கள்.

இதன் கீழ், இபிஎஃப் கணக்கிலிருந்து எல்ஐசியின் பிரீமியத்தை கட்டும் வசதி பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பணத்தை எடுப்பதற்கான செயல்முறை மற்றும் நிபந்தனைகள் என்ன?

பிஎஃப்-லிருந்து பணம் எடுத்து, LIC-யில் பிரீமியம் செலுத்த, EPFO-வின் புதிய நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். இதற்கு உறுப்பினர்கள் முதலில் EPFO-ன் படிவம் 14 ஐ சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகு, எல்ஐசியின் பாலிசி மற்றும் இபிஎஃப்ஓ கணக்கு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், எல்ஐசியின் பிரீமியத்தை செலுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

இரண்டாவது நிபந்தனை

நீங்கள் இபிஎஃப்ஓ-ன் படிவம் 14 ஐ நிரப்பும்போது, ​​உங்கள் கணக்கில் குறைந்தது இரண்டு மாத பிரீமியம் தொகை இருத்தல் வேண்டும்.

மூன்றாவது நிபந்தனை

எல்ஐசி-யின் பாலிசிக்காக மட்டுமே EPFO ​​கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மற்ற நிறுவனங்களுக்கு இல்லை என்பது குறிப்பிடதக்கது. கணக்கு வைத்திருப்பவர்கள் வேறு எந்த பாலிசியிலும் EPFO கணக்கில் இருந்து பணத்தை டெபாசிட் செய்ய முடியாது, என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இபிஎஃப்ஓ மற்றொரு பெரிய மாற்றத்தையும் செய்துள்ளது

இபிஎஃப்ஓ-ன் புதிய விதிகளின் கீழ், உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், பிஎஃப்-லிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை எடுக்க இபிஎஃப்ஓ ​​அனுமதித்துள்ளது. இந்தச் செயல்பாட்டில் நீங்கள் எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.

மேலும் படிக்க:

Ukraine Crises: தமிழகத்தைச் சேர்ந்த 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிப்பு

தமிழகம்: ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு...

English Summary: EPFO Good News: because of this new feature, members will be happy
Published on: 25 February 2022, 02:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now