News

Friday, 07 June 2019 03:09 PM

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இ.பி.எப்.ஓ. (E.P.F.O) என்னும் (மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட்) தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம்: தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிர்வாகம்

மேலாண்மை: மத்திய அரசு

பணி: உதவியாளர்

மொத்த காலி பணியிடங்கள்: 280

கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

25.6.2019 தேதியின்படி 20 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஊதியம்: மாதம் ரூ.44,900

விண்ணப்பக் கட்டணம்:

பொது(general) மற்றும் ஓபிசி(OBC) பிரிவினர் ரூ.500

எஸ்சி(SC), எஸ்டி(ST) பிரிவினர் மாற்றுத் திறனாளிகள்(PHYSICALLY CHALLENGED), பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற  இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.6.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும். https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

k.sakthipriya

krishi jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)