கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண் பணிகளுக்கான இயந்திரங்களை குறைந்த வாடகையில் எடுத்து பயன்பெறுமாரு விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம், சங்கத்தின் சொந்த நிதி, மற்றும் எஸ்எம்ஏஎம் திட்ட மானியம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டம் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று மாவட்டத்தில் உள்ள 77 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள் மற்றும் வாகனங்கள் குறைந்த வாடகைக்கு வழங்கப்பட உள்ளது.
குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்
விவசாயிகள் https://rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் கூட்டுறவு இ-வாடகை வாயிலாக தேவையின் அடிப்படையில் அந்தந்த வட்டாரங்களில் அருகில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
கூட்டுறவு சங்கங்களில் டிராக்டர்கள், ரோட்டாவெட்டர், பவர்டில்லர், கலப்பைகள், களைவெட்டும், எடுக்கும் இயந்திரம், கரும்புத்தோகை தூளாக்கும் இயந்திரம், ட்ரோன், பவர்ஸ்பிரேயர், விதை விதைக்கும் இயந்திரம், பிரஸ்கட்டர், தேங்காய்மட்டை உரிக்கும் இயந்திரம், பவர் வீடர், துளைதோண்டும் இயந்திரம், மஞ்சள் வேகவைக்கும் இயந்திரம், தேங்காய்மட்டை தூளாக்கும் இயந்திரம், ஈச்சர் லாரி, மகேந்திரா பொலிரோ பிக்கப், படாதோஸ்த், ஈச்சர் டிரக் மற்றும் டாடா 1212 ஏஸ் உள்ளிட்ட வேளாண் கருவிகள் மற்றும் வாகனங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைந்த வாடகையில் வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்னன.
Read also: சொர்ணவாரி நெல் மற்றும் கம்பு பயிருக்கு பயிர் காப்பீடு- இறுதித்தேதி அறிவிப்பு!
ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு
அதன்படி, ஈரோடு வட்டாரத்தில் நசியனூர், சித்தோடு, காலிங்கராயன்பாளையம், வீரப்பன்சத்திரம், மொடக்குறிச்சி வட்டாரத்தில் மொடக்குறிச்சி, எழுமாத்தூர், ஒடக்காட்டுவலசு, சின்னியம்பாளையம், எலவநத்தம், வீரப்பம்பாளையம், கொடுமுடி வட்டாரத்தில் கொடுமுடி, ஊஞ்சலூர், ஊஞ்சலூர் கொளத்துபாளையம், கந்தசாமிபாளையம், கொளநல்லிகுட்டபாளையம், பெருந்துறை வட்டாரத்தில் நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், சென்னிமலை வட்டத்தில் பெருந்துறை ஆர்.எஸ்., கந்தப்பகவுண்டன்வலசு, கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் கோட்டுபுள்ளாம்பாளையம், சிறுவலூர்கவுண்டம்பாளையம், மேவாணி, பொலவக்காளிபாளையம், கோபி வெள்ளாளபாளையம், கரட்டடிபாளையம், அளுக்குளி, காளிசெட்டிபாளையம், கொளப்பலூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், பவானி வட்டாரத்தில் ஆப்பக்கூடல் புதுப்பாளையம், கவுந்தப்பாடி, பெரியவடமலையபாளையம், திப்பிசெட்டிபாளையம், பருவாச்சி, ஊராட்சிகோட்டை, பெரியபுலியூர், சத்தி வட்டாரத்தில் அரியப்பம்பாளையம், வண்டிபாளையம், சத்தியமங்கலம், கெம்பநாயக்கன்பாளையம், இருட்டிபாளையம், காளிகுளம், சிக்கரசம்பாளையம், பெரியூர், ராஜன்நகர், சத்தியமங்கலம் மலைவாழ்மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம், நம்பியூர் வட்டாரத்தில் நம்பியூர், குருமந்தூர், கூடக்கரை, எருமைக்கரான்புதூர், மலையபாளையம், எலத்துார் செட்டிபாளையம், டி.என்.பாளையம் வட்டாரத்தில் தூக்கநாயக்கன்பாளையம், அக்கரைகொடிவேரி, பெரியகொடிவேரி, கள்ளிப்பட்டி, கொங்கர்பாளையம், கணக்கம்பாளையம், புஞ்சைதுறையம்பாளையம், காசிபாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வழங்கப்பட உள்ளது.
77 கூட்டுறவு சங்கங்கள்
இதேபோல், பவானிசாகர் வட்டாரத்தில் கோபிநல்லூர், காரப்பாடி, வெங்கநாயக்கன்பாளையம், மாரனூர், கொத்தமங்கலம், தாளவாடி வட்டாரத்தில் தலமலை, அருளவாடி, பனஹள்ளி, பையண்ணபுரம், அந்தியூர் வட்டாரத்தில் அந்தியூர், கீழ்வாணி, பர்கூர் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன் சங்கம், குப்பாண்டம்பாளையம், அம்மாபேட்டை வட்டாரத்தில் முரளிசென்னம்பட்டி, கேசரிமங்கலம், சிங்கம்பேட்டை என மொத்தம் 77 கூட்டுறவு சங்கங்களில் உள்ள வேளாண் கருவிகள் மற்றும் வாகனங்களை விவசாயிகள் கூட்டுறவு இ-வாடகையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயனடையலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more:
ஊடுபயிராக பசுந்தீவன பயிர்- ஏக்கருக்கு ரூ.3000 அரசு மானியம்!
PM Kisan- விவசாயிகள் eKYC பதிவு செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு: முழு விவரம் காண்க?