சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 September, 2022 7:16 PM IST
Gold Investment

இந்தியாவில் பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவது பழங்கால பாரம்பரியம். தற்போது, பெரும்பாலான மக்கள் பண்டிகைகளின் போது தங்க நகைகள், தங்க நாணயங்கள் போன்ற வடிவங்களில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
மேலும் தங்கத்தை பொருளாக வாங்கும் பட்சத்தில் அதற்கு காப்பீடு, பாதுகாத்தல் மற்றும் செய்கூலி, சேதாரம் என அதிக விலை கொடுக்க வேண்டியது உள்ளது.

வரிச் சலுகை

ஆகையால் முதலீட்டாளர்கள் பேப்பர் கோல்டு என்னும் டிஜிட்டல் தங்கத்துக்கு மாறிவருகின்றனர்.
வசதி மற்றும் பாதுகாப்பைத் தவிர, சில டிஜிட்டல் தங்க விருப்பங்களும் முதலீட்டாளர்களுக்கு மேலும் பயனளிக்கும் வரிச் சலுகைகளைக் கொண்டுள்ளன.

கவலை இல்லா சேமிப்பு

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு உங்கள் வருமானத்தில் இருந்து அதிக அளவு சேமிப்பு தேவை என்று நினைக்கலாம். டிஜிட்டல் தங்கத்தை பொறுத்தவரை மிக மிக குறைந்த விலையில் இருந்தும் தொடங்கலாம்.
1 கிராம் தங்கத்தின் மதிப்பு சற்று அதிகம் என்பதால் நீங்கள் 1 கிராம் தங்கம் கூட வாங்க தேவையில்லை. மாறாக மில்லி கிராமில் தங்கம் வாங்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது உங்களிடம் ரூ.1 இருந்தால் கூட முதலீடு செய்யலாம்.

தங்கத்தின் தரம்

இந்தத் தங்கம் 24 காரட் முதல் 22 காரட் வரையும் கிடைக்கிறது. 24 காரட் என்பது 99.99 தூயத் தங்கம் ஆகும். இந்தத் தங்கத்துக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.

இறையாண்மை தங்கப் பத்திரங்கள் (SGB)

முதலீட்டாளர்கள் விலையை ரொக்கமாகச் செலுத்தி, முதிர்வின்போது மொத்தத் தொகையைப் பெற வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது பாதுகாப்பான வழியாகக் கருதப்படுகிறது,
இதில் 5 ஆண்டுகள் என நீண்ட முதலீட்டு நோக்கம் கொண்டவர்கள் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தத் தங்கப் பத்திரங்களை விநியோகிக்கிறது. இந்தப் பத்திரங்களை விற்க முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை சந்தையை அணுகலாம்.

இந்த பத்திரங்கள் முதலீட்டாளர்களுக்கு ஆரம்ப முதலீட்டுத் தொகையில் ஆண்டுக்கு 2.50 சதவீதம் (நிலையான விகிதம்) வட்டி விகிதத்தை வழங்குகின்றன. முதலீட்டாளர் அரை ஆண்டு அடிப்படையில் வட்டிக் கடன் பெறுகிறார்.
மறுபுறம், SGB களுக்கு 8 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. ஒருவர் வெளியேறும் விருப்பத்தை ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது ஆண்டுகளில் இருந்து வட்டி செலுத்தும் தேதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் படிக்க:

தேனியில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் முகாம்

தஞ்சாவூர் மூலிகை பண்ணைப் பகுதியில் இருளில் தவிக்கும் மக்கள்

English Summary: Even if you have 1 rupee you can invest in gold, here are the details!
Published on: 27 September 2022, 07:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now