கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாம் அனைவரும் முன்வர வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
75வது சுதந்திர தினம் (75th Independence Day)
அவர் பேசுகையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாள் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதால் இந்த ஆண்டு சுதந்திர தினம் முக்கியத்துவம் பெறுகிறது.
கோவிட் 2வது அலை (Covid 2nd wave)
கோவிட்டிற்கு எதிரான போர் ஓயவில்லை. 2வது அலையை நாம் சமாளித்தாலும் இன்னும் விழப்புணர்வுடன் இருக்கவேண்டும். 50 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடபட்டுள்ளது. நாட்டில் பரவிய கோவிட் இரண்டாம் அலைக்கு பலர் பலியானது வேதனை அளிக்கிறது.
தடுப்பூசி (Vaccine)
கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களின் அயாரத உழைப்பால் நாம் கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாம் அனைவரும் முன் வரவேண்டும். எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.
ஒலிம்பிக் (Olympic)
சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில்,நமது விளையாட்டு வீரர்கள் தங்களின் திறமைகளினால் தேசத்திற்கு பெருமை சேர்த்தனர். 121 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போதைய ஒலிம்பிக்கில் , இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் பல்வேறு இன்னல்களை கடந்து விளையாட்டு துறையில், பெண்களின் பங்கேற்பு வெற்றியில் சகாப்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
பெண்கள் முத்திரை (Women's brand)
உயர் கல்வி நிறுவனங்கள் முதல் ராணுவம் வரையில் , மற்றும் ஆய்வகங்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை, பெண்கள் தங்கள் முத்திரையை பதிக்கிறார்கள். மகளிரின் இந்த வெற்றியால், எதிர்காலத்தில் வளர்ந்த இந்தியாவின் ஒரு பார்வையை நான் காண்கிறேன்.
இவ்வாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
மேலும் படிக்க...
முதல் வேளாண் பட்ஜெட்: தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பு உயர்த்தப்படும்!