இ-பாஸ், தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் பயணிக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. கடந்த ஜூலை 25ஆம் தேதி 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (ஆகஸ்ட் 25) அன்று 1,573 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஒரு மாதம் முதல் 30க்கும் கீழ் பதிவாகி வருகிறது.
அச்சுறுத்தும் கேரளா(Threatening Kerala)
கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தமிழகத்தை அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. நேற்று மட்டும் புதிதாக 31,445 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 215 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
நெகடிவ் சான்று(covid Negative Report )
தற்போது 1,70,312 பேர் கொரோனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோர் 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட சான்று அல்லது கொரோனா நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இ-பாஸ் கட்டாயம்(E-pass mandatory)
இந்த சூழலில் குமுளி வழியாக கேரளாவிற்கு செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் தடுப்பூசி சான்றுடன் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அனுமதியுண்டு என்று கேரள வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கம்பம்மெட்டு, குமுளி வழியாக கேரளா செல்லும் தமிழகத் தொழிலாளர்களின் வாகனங்கள், லோயர் கேம்ப், கம்பம்மெட்டு பகுதிகளில் தமிழக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கின்றன. தொழிலாளர்களின் வாகனங்களை தமிழகப் பகுதியிலேயே நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து அனுமதிக்கப் படுகிறார்கள்.
மேலும் படிக்க:
தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: கட்டுப்படுத்த ஆலோசனை!