பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 March, 2024 2:08 PM IST
Exhibition cum Seminar on Organic Farming

இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்கும் போது இரண்டு மூன்று ஆண்டுகள் காலம் பிடிக்கும். இருப்பினும் நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் திரும்ப வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி வட்டாரம் கொழுந்தளூரில் நேற்று (05.03.2024) வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்(PKVY) 2023-2024 மாவட்ட அளவிலான இயற்கை விவசாயம் குறித்து வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியினை திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார்கள்.

நிகழ்வு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில், “இயற்கை விவசாயம் மற்றும் வர்த்தக கண்காட்சி கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த வேளாண் துறை சார்ந்த அலுவலர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் பேசிய ஆட்சியர், ”இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் அவசியம் உணவு உட்கொள்கிறோம் என்றால் அதற்கு அறிவியல் முன்னேற்றம் தான் முக்கிய காரணம். அதற்காக வேளாண் இயற்கை முறையினை புறக்கணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மேலும் அனைவருக்கும் உணவு பாதுகாப்பை நமது அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது பசியுடன் யாரும் தூங்கச் செல்பவர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கையின் காரணமாக பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டமாகும். இதன் மூலம் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் உணவு கிடைக்கும் ஒரு சூழலை உருவாக்கி உள்ளோம்.”

இயற்கை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டுக்கோள்:

இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்கும் போது இரண்டு மூன்று ஆண்டுகள் உங்களுக்கு காலம் பிடிக்கும். காலம் காலமாக நாம் பாதுகாத்து வந்த இந்த பூமியில் இதை தொடர்ந்து செய்யும் பொழுது கண்டிப்பாக ஒரு மாற்றம் ஏற்படும். இப்பொழுது வேளாண் துறையில் உள்ள விவசாயிகள், ஒவ்வொருவரும் இந்த இயற்கை முறையினை கடைபிடிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் உணவு பாதுகாப்பு நிலையை அடைந்துள்ளோம்.

Read also: விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2000- PM kisan 16 வது தவணை விடுவிப்பு

மேலும் உணவு பாதுகாப்பில் நீடித்த நிலையே அடைய வேண்டும். நம் உணவு உட்கொள்ளும் போது எந்த வித பயமும் இன்றி நாமும் அடுத்த தலைமுறையும் நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றால் இயற்கை சார்ந்த விவசாயத்தை முன்னெடுப்பது மிகவும் அவசியமானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

"நமது மாவட்டத்தில் எந்த ஒரு விவசாய பெருங்குடி மக்களும் பாதிக்காத வண்ணம் நிலையினை உருவாக்கியுள்ளோம். மேலும் அவர்களுக்கான நிவாரணத் தொகையினையும் முழுமையாக வழங்கி உள்ளோம். தொடர்ந்து இயற்கை விவசாயம் சார்ந்து கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மிகச் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் தனது உரையில் தெரிவித்தார்.

இயற்கை வேளாண் கையேடு வெளியீடு:

தொடர்ந்து விவசாய பெருங்குடி மக்கள் இயற்கை விவசாயம் தொடர்பான அமைக்கப்பட்டுள்ள வர்த்தக கண்காட்சி செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்கள். பின்னர் இயற்கை வேளாண் தொடர்பான பொது கரங்கள் என்ற தலைப்பில் உள்ள கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட திருவள்ளுவர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விவசாயிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் 15 விவசாயிகளுக்கு ரூ.43,430 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் இணை இயக்குநர் வேளாண் திரு முருகன், வேளாண்மை அறிவியல் மையம் முனைவர் பானுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) வேதவல்லி, துணை இயக்குநர் சுசிலா, விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more:

அரசின் மானியத்தோடு வீட்டுக் கொல்லைப்புறத்தில் அலங்கார வண்ண மீன் வளர்ப்பது எப்படி?

பாசிப்பயறு மற்றும் நிலக்கடலையில் புதிய இரகம் வெளியீடு- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?

English Summary: Exhibition cum Seminar on Organic Farming at Tiruvallur District
Published on: 06 March 2024, 02:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now