News

Monday, 05 August 2019 10:53 AM

சென்னை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவி வந்தது மற்றும் ஒருசில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. தற்போது வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்ய  வாய்ப்புள்ளதாகவும் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரம் படி கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, சின்னக்கல்லார், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம், ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பூதபாண்டி, நீலகிரி மாவட்டம் தேவாலா, நடுவட்டம், நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஆகிய இடங்களில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
 
K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)