
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் இன்னும் சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
இதையடுத்து தென்மேற்கு பருவ காற்று வீசுவது குறைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பொலிவு குறைந்துள்ளது மற்றும் இதன் காரணமாக தமிழகத்தின் இதர பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் கடலோர மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரம் படி நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவாலா, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய பகுதிககளில் தலா 3 செ,மீ மழையும், கோவை மாவட்டம் சோலையாறு, சின்கோனா, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 2 செ,மீ மழையும், கோவை மாவட்டம் சின்னகல்லார், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய பகுதிகளில் தலா 1 செ,மீ மழையும், பதிவாகியுள்ளது.
https://tamil.krishijagran.com/news/heavy-rain-forecast-imd-issued-red-alert-for-wayanad-and-around/
K.Sakthipriya
Krishi Jagran