வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பை, 6,500 ரூபாயில் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மேலும், 2014 செப்., 1ம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த தகுதியுள்ள ஊழியர்களும் இதில் இணைவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
கூடுதல் அவகாசம்
விண்ணப்பிப்பதற்கான அவகாசம், மார்ச், 3ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. கூடுதல் அவகாசம் அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, மே 3ம் தேதி வரை அவகாசம் அளித்து, வருங்கால வைப்பு நிதியம் உத்தரவிட்டுள்ளது. 2014 செப்டம்பர் 1ம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த, தகுதியான ஊழியர்கள் அனைவரும் தங்களது ஊதியத் தொகையில் 8.33 சதவீதத் தொகையை பணியாளர் பங்காக செலுத்தி பயனடைய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், 2014க்கு முந்தைய பயனாளர்கள், இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆறு மாத காலத்திற்குள், சம்பந்தப்பட்ட பணியாளர்களும் தனியார் நிறுவனமும் இணைந்து, கூட்டாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானவர்கள் இதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்றும், பல விஷயங்களில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை என்றும் புகார் தெரிவித்திருத்தனர்.
வைப்பு நிதி திட்டம்
வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்து, தங்கள் தரப்பிலும் அதற்கு சமமான தொகையை சேர்த்து, நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இதில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படும்.
மேலும் படிக்க
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு: ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!
இரயிலில் வரப்போகும் புதிய வசதி: இனி திருட்டுப் பிரச்சனையே இருக்காது!