நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை, கரும்பு நடவுக்கு மானியம் வழங்குவதை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இடைக்கணு பூச்சியைக் கட்டுபடுத்த 50 சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சி பொறியும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம்
இதுதொடர்பாக, சர்க்கரை ஆலை முதுநிலை துணைத் தலைவர் ராமசுப்ரமணியம் கூறுகையில், கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை ஊழியர்கள் என பலதரப்பட்டோர் கொரோனா ஊரடங்கால் மிகவும் பாதித்துள்ளனர்.
அவர்களின் சிரமத்திற்கு ஆறுதலாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை ஏப்ரல் மாதம் வரை செயல்படுத்தினோம். தொடர் மழை, பிறகு கடுமையான வெயிலால் கரும்பு நடவு செய்ய முடியாததால் கால அவகாசத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
-
கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு 10,622 ரூபாய் வழங்கப்படும்.
-
வாழை, கொய்யா, செங்கல் சூளை ஆகியவற்றைத் தவிர்த்து கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு 20,622 ரூபாய் வழங்கப்படும்.
-
சவுக்கு பயிருக்கு பிறகு கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு 17,622 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம்.
பூச்சியை கட்டுப்படுத்த மருந்து
தற்போது, இந்த மானியம் வழங்கும் கால அவகாசத்தை ஜூன் மாதம் வரை நீட்டித்துள்ளோம். கூடுதலாக குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் 2,500 ரூபாய் மதிப்புள்ள கோரோஜன் மருந்தும் இடைக்கணு பூச்சியைக் கட்டுபடுத்த 50 சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சி பொறியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ஊட்டியில் கேரட் விலை குறைந்தது! கவலையில் விவசாயிகள்!
உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!
உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!