தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகக் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்ததால் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, தொற்று பாதிப்புக் கட்டுப்படுத்தப்பட்டது. இதைத்தவிர 2 டோஸ் தடுப்பூசியும் கட்டாயமாக்கப்பட்டது.
கவனக்குறைவு
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக,சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது.
மீறினால் அபராதம்
இதையெடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சமூக இடைவெளி
பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!