இணைய பாதுகாப்பு
ஃபேஸ்புக்கின் சைபர் பாதுகாப்பு கொள்கையின் தலைவர் நேதனியல் கிளீசியர் "இணைய பாதுகாப்பு " குறித்து கூறும் போது, இந்த பக்கங்களை நீக்கியதற்கு காரணம் ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தியவர்கள் தங்களின் அடையாளத்தை மறைத்து போலியான தகவல்களை பரப்பி வருகிறார்கள். எங்களது சேவையை யாரும் தவறாக பயன் படுத்த கூடாது. அதன் காரணமாகவே இந்த பக்கங்கள் மட்டுமின்றி தனியாக இந்தியாவில் 227 பக்கங்கள் மற்றும் 94 கணக்குகளை நீக்கியுள்ளோம்.
இதேபோன்று, பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு, இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் தவறான செய்தியையும் , வைரஸ்களையும் பரப்பிய 103 பக்கங்கள் கொண்ட , குழுக்களின் கணக்குகளையும் நீக்கியுள்ளது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை
பேஸ்புக் தளத்தில் போலியான செய்திகளைத் தடுக்கவும், வாக்காளர்கள் பாதிக்கப்படாமல் செய்யப்படும் அரசியல் ரீதியான விளம்பரங்களில் தமது நிறுவனம் விதிமுறைகளை கடுமையாக்கியள்ளது, மேலும் உலகம் முழுவதும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க தனி நடவடிக்கை எடுத்து வருகிறது, என்று
சைபர் பாதுகாப்பு கொள்கையின் தலைவர் கூறினார்.