News

Tuesday, 15 March 2022 09:22 AM , by: Elavarse Sivakumar

வரும் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கானக் காலக்கெடு இனி நீட்டிக்கப்படாது எனவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே பலமுறை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு பான் கார்டு எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து பான் - ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கான அவகாசம் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இனி கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 31ம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இணைப்பது எப்படி?

  • https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற லிங்கில் சென்று பான் கார்டை ஆதாருடன் இணைத்துள்ளதா என்பதை சோதனை செய்யலாம்.

  • Income Tax e-filing வெப்சைட்டுக்கு நீங்கள் முதல்முறையாக செல்கிறீர்கள் என்றால் அங்கு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

  • ஓடிபி வெரிஃபிகேஷன் நிறைவடைந்த பிறகு பான் கார்டு விவரங்களை கொடுத்து பாஸ்வேர்டு உருவாக்கி லாக்-இன் செய்யவும்.

  • வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டு அதில் ஆதாரை இணைப்பதற்கான லிங்க் இந்தப் பக்கத்தின் இடதுபுறத்தில் இருக்கும்.

  • அதில் உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை உள்ளிடவும். பின் லிங்க் ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

  • இப்போது உங்களின் இரண்டு ஆவணங்களும் இணைக்கப்பட்டுவிடும்.

செல்போன் வழியாக இணைக்க

UIDPAN என டைப் செய்து உங்களது ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை பதிவிட்டு( உதாரணம்: UIDPAN 456514521487 ABCDE1234X) 56161 or 567678 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். உங்களுடைய பெயர் மற்றும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக இருந்தால் அந்த ஆவணங்கள் தாமாக இணைக்கப்பட்டு விடும்.

மேலும் படிக்க...

4 பிரீமியம் செலுத்தினாலே போதும்- ரூ.1 கோடி கிடைக்கும்வரை!

கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)