பான் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2022 உடன் முடிவடைகிறது. உடனடியாக இதை நீங்கள் செய்யத் தவறினால், பான் கார்டு முடக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், பான் அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் பான் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் நீங்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.
நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்க தவறும் பயனர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. எனினும் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு அரசு இந்த கால நீட்டிப்பை வழங்கியது ஆதார் - பான் இணைப்புக்கு அரசு கால நீட்டிப்பு வழங்குவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவே கடைசியாக வழங்கப்பட்ட காலக்கெடு எனவும் அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ஆதாருடன் பான் கார்டை இணைக்க பின்வரும் எளிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இணையதளம், குறுஞ்செய்தி ஆகிய இரு முறைகளில் பான் அட்டையை ஆதாருடன் இணைக்க முடியும். அதுமட்டுமில்லாமல், வங்கிக் கிளைகளை அணுகியும் இந்த சேவையை பயனாளிகள் பெற முடியும்.
இணைப்பது எப்படி?
-
முதலில் பான் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
-
இந்த இணைப்பை கிளிக் செய்யவும்link pan with aadhar.
-
திரையில் பான் எண், பிறந்த தேதி, Captcha ஆகிய மூன்று கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
-
அதை பூர்த்தி செய்து 'Submit' என்பதை கிளிக் செய்யுங்கள்.
-
உங்கள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட்டிருந்தால் அதற்கான செய்தி திரையில் தோன்றும்.
-
இல்லை என்றால் உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்ற செய்தி திரையில் வரும்.
ஆன்லைன் வழிமுறைகள்
-
வருமான வரித்துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதார் இணைப்பிற்கான லிங்கைக் கிளிக் செய்யவும்.
-
இந்த தளத்தில் உங்கள் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
-
இதில் 'USER ID' கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் உங்கள் பான் எண்ணை உள்ளிடவும்.
-
தொடர்ந்து அதில் கேட்கப்படும் தகவல்களைக் கொடுத்து பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும்.
மேலும் படிக்க...