கொடைக்கானலில் ரூ.500 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். கள்ள நோட்டு கும்பலை இன்னும் காவல் துறையினர் பிடிக்காததால் இந்த அச்சம் இன்னும் அதிகரித்துள்ளது.
கள்ள நோட்டு (Fake Note)
சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். மக்கள் ஜனரஞ்சகமாக கூடும் வியாபார ஸ்தலங்கள், பஸ்ஸ்டாண்ட், டாஸ்மாக் உள்ளிட்ட இடங்களில் மார்ம நபர்கள் சில வாரங்களாக ரூ. 500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். இது பற்றிய தகவல்கள் பொதுமக்களிடையே பரவ, பெறப்பட்ட கள்ள நோட்டுகளை போலீசிற்கு தெரிவிக்காமல் சம்பந்தப்பட்டோர் ஆங்காங்கே கிழித்தும், எரித்து வரும் சூழல் உள்ளது.
இங்குள்ள சில ஏ.டி.எம்., மையங்களிலும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் உஷார் அடைந்துள்ள நிலையில் போலீசாரும் மர்ம நபர்களை நோட்டமிட்டு வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது: கள்ள நோட்டுகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும் பட்சத்தில் அதன் மீது விசாரணை நடத்த ஏதுவாக இருக்கும், என்றனர். கொடைக்கானலில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளால் வழக்கமான நோட்டுகளை பெறுவதிலும் மக்கள் தயங்கும் சூழல் நிலவுகிறது. காவல் துறையினர் தான் இக்கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க
ஆன்லைனில் கடன் வாங்க வேண்டாம்: எச்சரிக்கை விடுத்த வங்கி!
தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலாத் துறை தொழில்முனைவோருக்கு விருது!