முகூர்த்த தினங்கள், விசேஷங்கள் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை பல மடங்கு சரிந்துள்ளது. மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.250-க்கு விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நிலக்கோட்டை, கொடைரோடு ஆகிய சுற்றுப் பகுதிகளில் மல்லிகைப்பூ அதிகமாக சாகுபடி செய்யப் படுகிறது. இந்த மாதம் தொடக்கம் முதல் ஜூன் 14 வரை அதிக திருமணங்கள் நடைபெற்றன. இதனால் பூக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது.
பூக்கள் விலை (Flowers Rate)
வரத்து அதிகம் இருந்த போதும், தேவையும் அதிகம் இருந்ததால் பூக்கள் விலை உச்சத்துக்கு சென்றது. தற்போது முகூர்த்தங்கள் முடிந்த நிலையில், கோயில் திருவிழா உள்ளிட்ட வேறு விசே ஷங்கள் இல்லாததால் பூக்கள் விலை குறைந்து வருகிறது.
குறிப்பாக, மல்லிகைப்பூ கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட பல மடங்கு விலை வீழ்ச்சி அடைந்தது. மல்லிகைப் பூ நேற்று ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.
முல்லைப் பூ ரூ.120, கன காம்பரம் ரூ.150, சம்பங்கி ரூ.20, செண்டுமல்லி ரூ.15-க்கு விற் பனையானது. ஆடி மாதம் முகூர்த்த தினங்கள் இல்லாததால் பூக்கள் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
எலுமிச்சை விவசாயத்தில் பூச்சி மேலாண்மை அவசியம்!
இரசாயன ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்படும் வாழைப் பழங்கள்: உடலுக்கு கேடு!