பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 26 April, 2019 12:41 PM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மீதமான  மழையிலிருந்து கனமான மழை வரை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு மாநிலங்களுக்கும்  'ரெட் அலர்ட்' கொடுக்க பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்க கடல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் இது வலுவடைய கூடும் என எதிர் பார்க்க படுகிறது. இந்த புயலுக்கு  "ஃபனி புயல்" என்று பெயரிட பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் தமிழகம் முழுவதும் வெப்ப சலன மழை பெய்தது. ஆனால் இனி வர இருக்கும் மழையானது சற்று அதிகமாகவே இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  20 cm வரை மழை பெய்யும் என எதிர் பார்க்க படுகிறது.

வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஃபனி புயல் மணிக்கு 40 - 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும், பின் வலு பெற்று மணிக்கு 100 கிலோமீட்டர் வரை வீச தொடங்கும். இந்த புயலினால் இலங்கை, தமிழகம் மற்றும் புதுவையில் மிக கன மழை பெய்யக்கூடும். இம்மாதம்  27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய கூடும். புயல் வலுவடையும் பொது மிக அதிக அளவு மழை பெய்ய கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 30 மற்றும்  மே 1 ஆகிய தேதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறையினால் சுற்றறிக்கை அனுப்ப பட்டுள்ளது. அதில் அவர்கள் புயலினை எதிர்கொள்ள வேண்டிய அனைத்து அடிப்படை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்டங்களில் முகாம்கள், தண்ணீர், உணவு போன்ற அடிப்படை தேவைகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டு கொள்ள படுகிறது.

English Summary: "Fani Cyclone" Tamil Nadu and Pondycherry under "Red Alert"
Published on: 26 April 2019, 12:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now