News

Friday, 12 August 2022 07:12 PM , by: T. Vigneshwaran

Farm loan waiver

டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வலுவாக காலூன்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், வேலைவாய்ப்பில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது.

வாக்குறுதிகளை அள்ளிவிட்ட குஜராத் காங்கிரஸ் இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் குஜராத் மக்களை கவர இன்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதிஷ் தாக்கூர் கூறியதாவது:-

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். குஜராத் மின் மிகை மாநிலம் என்று இப்போது ஆளும் பாஜக கூறினாலும், விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு 10 மணி நேரம் இலவச மின்சாரம், அதுவும் பகலில் வழங்கப்படும்.

மின் திருட்டு தொடர்பாக விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் மின் திருட்டு வழக்குகளையும் திரும்பப் பெறுவோம் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக, வேளாண் விளைபொருட்களை வாங்குவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வருவோம். விவசாயிகளிடமிருந்து 20 கிலோ வேளாண் விளைபொருட்களை வாங்குவதற்கு காங்கிரஸ் அரசாங்கம் கூடுதலாக 20 ரூபாய் போனஸ் கொடுக்கும்.


மேலும் படிக்க:

ஒரே ஆண்டில் 3வது முறையாக பால் விலை உயர்வு

தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருள்


எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)