News

Thursday, 27 May 2021 09:46 AM , by: R. Balakrishnan

Credit : Daily Thandhi

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே உள்ள வடுகக்குடியை சேர்ந்தவர் மதியழகன். இவர் தனது விவசாய நிலத்தில் வாழை சாகுபடி (Banana Cultivation) செய்துள்ளார். கொரோனா காலத்தில் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தனது தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை இலவசமாக கொடுக்க மதியழகன் முடிவு செய்தார்.

இலவசமாக வாழைப்பழங்கள்

இதனைத் தொடர்ந்து அவர் தஞ்சை மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கலைச்செல்வனை அணுகி, கொரோனா நோயாளிகளுக்கு (Corona Patients), தான் வாழைப்பழங்களை கொடுக்க விரும்புவதாக கூறினார். அதைக்கேட்ட அவர் இதுகுறித்து மருத்துவப்பணிகள் துறை உதவி இயக்குர் நமச்சிவாயத்திடம் தகவல் தெரிவித்தார். அவரது அனுமதியின் பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க 2½ டன் வாழை பழத்தை வாகனம் மூலம் ஏற்றி மதியழகன் அனுப்பி வைத்தார்.

மேலும் பழங்கள் அழுகாமல் இருக்க பதப்படுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு எவ்வளவு வாழைப்பழம் தேவைப்படுகிறதோ அதை தன்னால் முடிந்தவரை அனுப்பி வைக்கிறேன் என்று மதியழகன் கூறினார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு (Corona curfew) காலத்திலும், இவர் தனது தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை இலவசமாக மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். விவசாயியின் இந்த செயலுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க

கொரோனா ஊரடங்கால் செடியிலேயே வீணாகும் வெள்ளரிப்பிஞ்சு! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நடமாடும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை வாகனம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)